இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, October 12, 2017

ஊதிய உயர்வு அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது;ஜாக்டோ ஜியோ தலைவர்கள்


அரசு அறிவித்த ஊதிய உயர்வு ஏமாற்றமளிக்கிறது என்று ஜாக்டோ ஜியோ தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறையின் மாநில பொதுச்செயலாளர் பி.கிருஷ்ணசாமி கூறியதாவது: அரசு ஊழியர் சங்க 7வது ஊதியக்குழு பொத்தாம் பொதுவாக பெரிதாக வழங்கியது போல் பொதுமக்கள் மத்தியில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

6வது ஊதியக்குழு நிலுவைத் தொகையை 3 தவணைகளிலும் அடுத்த ஊதியக்குழுவில் அந்த நிலுவைத்தொகை பொது வருங்கால வைப்புநிதி கணக்குகளிலும் இதுவரை வைக்கப்பட்டு வந்தது. ஆனால் ஒட்டுமொத்தமாக 21 மாத கால நிலுவைத்தொகையை வழங்காதது வருத்தமளிக்கிறது. அதே போல மதிப்பூதியம், தொகுப்பூதியம் பெறக்கூடிய ஊராட்சி செயலாளர்கள் 13 மணி நேரத்திற்கும் கூடுதலாக பணியாற்றுகிறார்கள். காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை பணிபுரியக்கூடிய இவர்கள் மக்களின் அடிப்படை தேவைகளான சுகாதாரம், குடிநீர், தெருவிளக்கு போன்ற பணிகளை செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

டெங்கு ஒழிப்பு பணிகளையும் பராமரிக்கிறார்கள். இந்த ஊராட்சி செயலாளர்கள் குறித்த ஊதியம் குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தும் போது வலியுறுத்தினோம். அப்போது இந்த ஊழியர்களின் ஊதிய மாற்றம் நிச்சயமாக தனியாக அறிவிப்போம் என்றார்கள். ஆனால் அரசு அறிவித்த அறிவிப்பு இதற்கு மாறாக உள்ளது. வருத்தமளிக்கிறது. மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த போது மதிப்பூதியம், தொகுப்புதியம் பெறுபவர்களின் பணித்தன்மை, பணி நிலைமையை கணக்கில் எடுத்து ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று சொன்னார். அந்த வாக்குறுதியை தற்போதைய அரசு காப்பாற்றவில்லை.

இந்த முரண்பாடுகள் குறித்து ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் பரிசீலிப்போம். நீதிமன்ற உத்தரவுபடி தான் இந்த உத்தரவு வெளியிடப்பட்டு உள்ளது. வருகிற 23ம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது நீதிமன்ற நடவடிக்கைக்குப் பிறகு எங்களது அறிவிப்பு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு 27 ஆயிரம் வரை இழப்பு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மான்ட் கூறியதாவது:

நாங்கள் 9 நாட்களாக நடத்திய போராட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகளிலே முக்கியமானது 6வது ஊதியக்குழு முரண்பாடுகள் களையப்பட்டு பின் 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுலாக்க வேண்டும் என்பதுதான். ஆனால் 6வது ஊதியக்குழு முரண்பாடுகள் களையப்படவில்லை.இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.27 ஆயிரம் வரை ஊதிய இழப்பு ஏற்படுகிறது. 1.1.2016 முதல் 1.10.2017 வரை 21 மாத காலத்திற்கான நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை.

1.1.2016 முதல் இந்த ஊதியக்குழு அமுல்படுத்துவதாக இந்த அரசு அறிவித்தாலும் அதற்கான பணப்பலன் எதுவும் வழங்காத காரணத்தினால் 13லட்சம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாகி இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment