இரண்டு லட்சம் பேர் எழுதிய, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கான, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக அரசு பள்ளிகளில், 3,375 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஜூலை, 2ல் தேர்வு நடந்தது. இதில், 2 லட்சத்து, 99 பேர் பங்கேற்றனர். இந்த பணி நியமனத்தில், அரசின் விதிகளின் படி, மாற்று திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை என, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முடிவில், மாற்று திறனாளிகளுக்கு, நான்கு சதவீத இட ஒதுக்கீடு வழங்க, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, தேர்வு முடிவுகளை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது.
இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும், 28, 29ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். அது பற்றிய விபரங்கள், டி.ஆர்.பி.,யின், trb.tn.nic.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., தலைவர், ஜெகநாதன் தெரிவித்துள்ளார். இந்த தேர்வில், சரியான விடையை தேர்வு செய்யும், 'அப்ஜெக்டிவ்' வகை வினாக்கள் இடம் பெற்றன. கம்ப்யூட்டர் ஸ்கேனர் மூலம் திருத்தும் வகையிலான, ஓ.எம்.ஆர்., விடைத்தாள்கள் வழங்கப்பட்டன. விடைத்தாளில், வினாத்தாளின் வரிசை குறியீட்டு எண்ணை, 'ஷேட்' செய்ய வேண்டும் என, அறி வுறுத்தப்பட்டிருந்தது.
மதிப்பீட்டு பணியின் போது, பலர் வினாத்தாள் வகையை, 'ஷேட்' செய்யவில்லை என, தெரிய வந்தது. அதனால், அவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், வினாத்தாள் குறியீட்டு எண்ணை எழுதியவர்களின் விடைத்தாள்கள், மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment