பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. அந்த தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக துணைத் தேர்வுக்கு செப்டம்பர் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை அரசு ேசவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணமாக ரூ.125 மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 சேர்த்து மொத்தம் ரூ.175 பணமாக சேவை மையங்களில் செலுத்த வேண்டும்.
பார்வையற்றோர், காதுகேளாதோருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தனித் தேர்வர்கள் தேர்வுகளை, விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தற்போது அறிவிக்கப்பட்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் மாணவ மாணவியர் சிறப்பு அனுமதி திட்டத்தில்(தட்கல்) செப்டம்பர் 11, 12ம் தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தட்கலில் விண்ணப்பிக்கும் தனித் தேர்வர்களுக்கு திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோவை, கடலூர், வேலூர், மற்றும் சென்னை ஆகிய மண்டல அலுவலகங்களின் தலைமை இடங்களில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும். தட்கலில் விண்ணப்பிப்போர் தேர்வுக் கட்டணங்களுடன் அனுமதி கட்டணமாக ரூ.500 சேர்த்து செலுத்த வேண்டும்.
No comments:
Post a Comment