மருத்துவ கலந்தாய்வில் மாநில பாடத்திட்டத்தில் படித்த 3 ஆயிரத்து 112 மாணவர்களுக்கு, இடமளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒதுக்கீடு செய்யப்பட்ட 4ஆயிரத்து 546 இடங்களில், 3 ஆயிரத்து 112 இடங்கள் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 -ம் தேதி வரை நடந்த கலந்தாய்வில் தமிழ்நாட்டை சேர்ந்த, தமிழகத்தில் படித்த 4 ஆயிரத்து 90 மாணவர்கள், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட 428 மாணவர்களுக்கு உரிய விதிகளின்படி மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மருத்துவ கலந்தாய்வில் பிற மாநில மாணவர்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறு என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு வெளிப்படையாக நடைபெற்று வருகிறது என்றும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கலந்தாய்வு இட ஒதுக்கீட்டு முறையில் தவறு செய்திருப்பது கண்டறியப்பட்டால், சேர்க்கை ரத்து செய்து மற்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
No comments:
Post a Comment