தமிழக தேர்வுத்துறை சார்பில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் புதிய தேர்வு மையங்கள் கேட்கும் கருத்துருக்களை பள்ளிகள் மூலம் பெற்று தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தேர்வு மையம் அமைப்பது இன்றியமையாதது என்று கருதப்படும் பள்ளிகளுக்கு மட்டும் திட்டவட்டமான கருத்துருக்களை அனுப்ப வேண்டும். புதியதாக அமைய உள்ள தேர்வு மையங்கள் செயல்படுவதற்கு தகுதி உள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும், போக்கு வரத்து வசதி குறைவாக இருந்து 10 கிமீ தூரத்துக்கு மேல் மாணவர்கள் பயணம் செய்து தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்தில் உள்ள மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் புதிய தேர்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாமல் நீதி மன்ற உத்தரவு பெற்று செயல்படும் பள்ளிகள் குறித்தும் தெரியப்படுத்த வேண்டும். இந்த விவரங்கள் அடங்கிய பட்டியல்களை 15ம் தேதிக்குள் தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
No comments:
Post a Comment