தமிழகம் முழுவதும், ௬௭௦ அரசு பள்ளிகளில், மத்திய அரசின், 'எல்காம் ஆங்கிலம், ஸ்டெம் அறிவியல்' ஆகிய திட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. நாடு முழுவதும் பள்ளிக்கல்வியில் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யும் வகையில், பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்துகிறது. அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு, உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.
இதன்படி, தமிழகத்தில், 670அரசு பள்ளிகளில், 'எல்காம் ஆங்கிலம், ஸ்டெம் அறிவியல், ஏரியல் கணிதம்' ஆகிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
● 'எல்காம் ஆங்கிலம்' திட்டத்தில், ஊரக பகுதி மாணவர்களுக்கு சரளமாக ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்
● 'ஸ்டெம் அறிவியல்' திட்டத்தில், அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றை இணைத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி தரப்படும்
● இந்த திட்டத்தால், மாணவர்கள் எளிதில், பார்முலாக்கள் என்ற சூத்திரங்களையும், சமன்பாடு என்ற, ஈக்வேஷன்களையும், கற்றுக்கொள்ள முடியும்
● ஏரியல் கணிதம் திட்டத்தில், மாணவர்களுக்கு குறைந்த நேரத்தில், அதிக கணித பாடங்களை தெரிந்து கொள்ளும் வகையில், மாணவர்களுக்கு புரியும் வகையில் கற்றுத் தரப்படும்
● இதில், கணிதத்தை விரும்பி, அதை ஆர்வமாக படிக்கும் முறையை மாணவர்களுக்கு கற்றுத் தருகின்றனர். இந்த மூன்று திட்டங்களுக்கும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, பொறுப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment