வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின், ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய, மாவட்ட தொடக்கக் கல்வி அலு வலர்கள் உத்தரவிட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட், 22ல், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அன்று, விடுப்பு வழங்கப்படாது எனவும், பணிக்கு வராதவர்களுக்கு, சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும், முன்கூட்டியே எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.இருப்பினும், வேலைநிறுத்த போராட்டத்தில், தொடக்கக் கல்வித்துறையில் மட்டும், 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு, ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும், 20ம் தேதிக்குள், சம்பள பட்டியல் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இம்மாதத்தில் முன்கூட்டியே சம்பள பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தாலும், ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்து, கருவூல செலுத்து சீட்டு மூலம் செலுத்த, மாவட்டதொடக்கக் கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்
No comments:
Post a Comment