நாடு முழுவதும், 'டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், இம்மாத இறுதிக்குள் அனைத்து வாடிக்கை யாளர்களுக்கும், 'மொபைல் பேங்கிங்' சேவை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்' என, வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தர விட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலர், அருணா சுந்தரராஜன் கூறியதாவது:
மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டுஅறிவிப்புக்குப் பின், நாட்டில், 'டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனை அதிகரித் துள்ளது. மக்கள், டிஜிட்டல் முறைக்கு மாற, அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், மொபைல் பேங்கிங் வசதியை ஏற்படுத்தி தர, வங்கிகள் முன் வர வேண்டும். மொபைல்பேங்கிங் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வங்கிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே, யு.பி.ஐ., மற்றும், 'பீம்' ஆப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, தானாகவே, மொபைல் பேங்கிங், பயன்பாட்டில் வந்துவிடும்.
மற்ற அனைத்து வாடிக்கையாளர்களும், இம்மாத இறுதிக்குள் மொபைல் பேங்கிங் வசதி பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment