மத்திய அரசு 1995-ம் ஆண்டுக்குக் கீழே வரும் அனைத்து இ.பி.எஃப் பென்ஷன் தாரர்களுக்கும் ஆதார் எண் கட்டாயம் என்று கூறி இருக்கிறது. இதன் மூலம் 2.5 கோடி பேர் தங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 'இ.பி.எஃப் திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
அப்படி ஆதார் எண் இல்லாதவர்கள் இம்மாதம் 31-ம் தேதிக்குள் அதற்கு விண்ணப்பித்து அதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்' என தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது. குறைந்த கால அவகாசத்தில் அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தப் பார்க்கிறது. அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் புகார் அளிக்கின்றன.
No comments:
Post a Comment