மாணவர்கள் கல்விக் கடன் தொடர்பாக நீங்கள் மாநிலங்களவையில் எழுப்பிய பிரச்னை குறித்து கீழ்க்காணும் விளக்கத்தை தெரிவிக்க விரும்புகிறேன்.
கல்விக் கடன் வசூலிப்பதற்கான தற்போதைய ஏற்பாடுகளுக்கு உரிய அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின்படியே அந்த நிறுவனங்கள் செயல்படுகின்றன. வசூலாகும் கல்விக் கடன் தொகை மீண்டும் கல்விக் கடனுக்காக செலவிடப்படுகிறது.
மாணவர்கள் கல்விக் கடன் வட்டியில் மத்திய அரசு முழு மானியம் வழங்கி வருகிறது. பெற்றோர் ஆண்டு வருமானம் 4.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது. கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் 75 சதவீத ெதாகைக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. கல்விக் கடன் பெறுவதை எளிமையாக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. www/ vidyalakshmi.co/in என்னும் இணையதளத்தை இதற்காக மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த இணையதளம் மூலம் எளிதாக கல்விக் கடன் விண்ணப்பிக்கவும் பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment