பெட்ரோல் பங்க்குகளில் கார்டுகளுக்கான சேவைக்கட்டணம் வாடிக்கையாளர்கள் மீது சுமத்தப்படாது: அமைச்சர்
பெட்ரோல் பங்குகளில் டெபிட் மற்றும் கிரடிட் கர்டுகள் பயன்படுத்துவதற்கான சேவைக் கட்டணம் வாடிக்கையாளர்கள் மீது சுமத்தப்படாது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எண்ண்எய் நிறுவனங்கள் மற்றும் வங்கி தரப்பு ஆகியோரிடம் டெல்லியில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதான் கூறுகையில், பெட்ரோல் பங்குகளில் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கான சேவைக்கட்டணத்தை வங்கிகள் அல்லது எண்ணெய் நிறுவனங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சேவைக்கட்டணம் தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறகள் வரும் 16ம் தேதி வகுக்கப்படும். டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான சேவைக்கட்டணத்தை பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கல் மீது செலுத்தக் கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதே உத்தரவு ரிசர்வ் வங்கி தரப்பில் கடந்த டிசம்பர் 16ம் தேதி வெளியிட்ட அறிவிக்கை மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் 0.75 சதவீதம் தள்ளுபடி என்ற நிலை தொடரும் என்று பிரதான் தெரிவித்தார்.
கார்டுகள் மூலம் பணம் செலுத்துவதற்கு ஒரு சதவீதம் அளவுக்கு சேவைக்கட்டணம் விதிக்க வங்கிகள் முடிவு செய்ததைக் கண்டித்து கார்டுகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்தனர். மத்திய அரசின் தலையீட்டைத் தொடர்ந்து தங்களது முடிவை 13ம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக அவர்கள் அறிவித்தனர். இந்தநிலையில் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதால் பெட்ரோல் பங்க்குளில் கார்டுகளைப் பயன்படுத்தும் நிலையே தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment