அரசு பள்ளிகளில், 8ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள் துவங்கியுள்ளன. நுழைவுத்தேர்வு மற்றும் போட்டி தேர்வுகளில், தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பெருமளவு குறைந்துள்ளது. இதை சரி செய்யும் வகையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் படி, 1,440 பள்ளிகளில், சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. இதற்காக, டில்லியைச் சேர்ந்த, பிரபல நிறுவனத்தின் புத்தகங்கள், தமிழக அரசு பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு உள்ளன. இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வு, இன்ஜி., படிப்புக்கான, ஜே.இ.இ., தேர்வு, கல்வி உதவித்தொகை பெற உதவும், தேசிய திறனாய்வு தேர்வு மற்றும் தேசிய ஊரக திறனாய்வு தேர்வுகளுக்கு, சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. 8ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்கள், இதில் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment