நன்றி:tnsocialpedia
பொங்கல் சிறப்பு கவிதை-
தோழர் மணிகண்ட பிரபு
கடுப்பு பொங்கல்
ஆறு மணிக்கு
அலாரம் வைத்து எழுந்தது
மலையேறியாச்சு
டி.வி பார்த்து
முகநூலில் லைக்கிட்டு
வாட்ஸ் அப்பில் வாழ்த்து சொல்லி
பட்டி மன்றம் பார்த்தவுடன்
பாதிப் பொங்கல் முடிந்தது
தேங்கி வழிந்து கொண்டிருக்கும்
வாட்ஸ் அப் குழுக்களில்
க்ளியர் சார்ட் செய்தவுடன்
அன்ரூல்ட் நோட்டில்
எழுதிப் பழகிய நிம்மதி
ரிமூவ் டேக் செய்தபின்பும்
கேன்டி கிரஷ்க்கு தவிர்த்து
பொங்கல் தின்று படுத்தால்
நாள் முழுதும் தூக்க தண்டனை தான்
ரேசன் கடை கரும்பு
தின்னுட்டு
வீதியை பார்த்தால்
பணமில்லாத ஏடிஎம் மாதிரி
வெறிச்சோடி கிடக்குது
கட்டிடமும் கட்டிடமும்
சார்ந்த இடத்தில் இருந்துகொண்டு
வயலும் வயல்சார்ந்த
இடம் பார்த்து வருத்தமடையுது மனம்
வார விடுமுறையில் தான்
வாழ்க்கை கொஞ்சம் மிஞ்சுகிறது
வலிகளை நினைத்தால்
துக்கம் மட்டுமே எஞ்சுகிறது"!
தோழமையுடன்
மணிகண்டபிரபு, திருப்பூர் ,TNPTF
No comments:
Post a Comment