மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை சார்பில் தன்னார்வ அமைப்புகளின் நிலைக்குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், நாட்டில் 50-55 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ. 9 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. மேலும் பணிக்கொடை 2 மடங்கிற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.10-15 லட்சமாக இருக்கும் பணிக்கொடை ரூ. 25-35 லட்சமாக உயர்த்தப்படுகிறது. ஓய்வு பெற்ற ஊழியர்களின் திறமையை நாம் முறையாக பயன்படுத்த முடியும் என்றார்.
No comments:
Post a Comment