இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, January 22, 2017

ரூ.2 லட்சத்துக்கு மேல் டிபாசிட் செய்தால் வருமானவரி நோட்டீஸ்


செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின், இரண்டு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வங்கிகளில், 'டிபாசிட்' செய்தவர்களுக்கு, வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பி வருகிறது.

மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு திட்டம், நவ., 8ல் அறிவிக்கப்பட்டது; இதை யடுத்து, பழைய நோட்டுகளை வங்கிகளில் டிபாசிட் செய்து கொள்ள அனுமதி வழங்கப் பட்டது. இதை பயன்படுத்தி, கறுப்புப் பண பதுக்கல் கும்பல், பல கோடி ரூபாயை வங்கிகளில் டிபாசிட் செய்து, 'வெள்ளை' ஆக்கியது.

இதையடுத்து, 2 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக
டிபாசிட் செய்யப்பட்ட வங்கி கணக்குகளை ஆய்வு செய்யும் பணியை, மத்திய அரசு முடுக்கிவிட்டுள் ளது. இதுகுறித்து, மத்திய நேரடி வரிகள் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஏழை மக்களின், 'ஜன்தன்' வங்கி கணக்குகள் உட்பட,மற்றவர்கள் வங்கி கணக்குகளில், கறுப்பு பணமாக இருந்த, பழைய நோட்டுக்களை, 'டிபாசிட்' செய்து பெரும் தொகையை வெள்ளையாக்கியது உறுதியாகி உள்ளது.நாடு முழுவதும், செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின், 2 லட்சம் ரூபாய்க்கு மேல், டிபாசிட் செய்யப்பட்ட வங்கி கணக்குகளின் எண்ணிக்கை, 60 லட்சம்; இவற்றில், 7.34 லட்சம் கோடி ரூபாய், 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கு, விளக்கம் கோரி, வருமான வரித்துறையின் சார்பில், 'நோட்டீஸ்' அனுப்பும் நடவடிக்கைதுவங்கியுள்ளது.வட கிழக்கு மாநிலங்களில் உள்ள வங்கிகளில், 10,700 கோடி ரூபாய் டிபாசிட் ஆகியுள்ளது. கூட்டுறவு வங்கி களில், 16,000 கோடி ரூபாயும், மண்டல கிராம புற வங்கிகளில், 13 ஆயிரம் கோடியும் டிபாசிட் ஆகியுள்ளது.

இந்த வங்கி கணக்குகளில், முறைகேடாக, பணம்,
'டிபாசிட்' செய்யப்பட்டது குறித்து, வருமான வரித்துறையுடன் இணைந்து, அமலாக்க பிரிவும், சி.பி.ஐ., எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பும் விசாரணையை துவக்கிஉள்ளது.

வங்கிகளில், சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு மட்டுமின்றி, கடன் கணக்குகளிலும், செலுத்தப் பட்ட தொகை குறித்து முழுமையாக விசாரணை நடைபெறும். இதில், முறைகேடு செய்யப்பட்டது உறுதியானால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment