பள்ளி மாணவ, மாணவியரின் வீட்டு கழிப்பறை எண்ணிக்கையை கணக்கெடுத்து, அறிக்கை தாக்கல் செய்ய, பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின், 'துாய்மை இந்தியா' திட்டத்தில், திறந்தவெளி கழிப்பறைகளை மாற்றி, வீடுகளிலும், பொது இடங்களிலும் கழிப்பறைகள் கட்ட பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
இதையொட்டி, அனைத்து அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் மத்தியில், கழிப்பறை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பள்ளி மாணவ, மாணவியரின் வீடுகளில் கழிப்பறை உள்ளதா என, ஊரக வளர்ச்சித் துறையுடன் சேர்ந்து, பள்ளிக் கல்வித் துறை கணக்கெடுக்கிறது. இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் இருந்து, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், 'அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், மாணவ, மாணவியரிடம் பேசி, கழிப்பறைகள் இல்லாத வீடுகளின் பட்டியலை, ஜன., 18க்குள், ஒப்படைக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment