தமிழக அரசின் சார்பில் 2016ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாக பணியாற்றி வரும் கல்வி நிறுவனங்கள், தனி நபர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 2016ம் ஆண்டின் ‘சுற்றுச்சூழல் விருதுகள்’ வழங்கி கவுரவிப்பதற்கு தமிழக அரசு உத்தேசித்துள்ளது. அதன்படி, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள், தனி நபர்கள் 18 வயதை கடந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆராய்ச்சி கட்டுரைகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் தரமான ஏடுகளில் பிரசுரிக்கப்பட்டவைகள் ஏற்றுக்கொள்ளப்படும். வருகிற 30ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 28ம் தேதி வரை, சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள சுற்றுச்சூழல் துறை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெறலாம். மார்ச் மாதம் 6ம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment