குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய உரிமைச்சட்டம் 2009ன்படி, 25சதவிகிதம் ஏழைமாணவர்கள் சேர்கை விவகாரத்தில், தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களின் விவரம். tnmatricschools.comஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று இலவச கட்டாயக்கல்வி சட்ட மாநில முதன்மை தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பிரிவு12(1)(c)இன் கீழ் 25% இடஒதுக்கீட்டில் 30.06.2015 நிலவரப்படி காலியாக உள்ள இடங்களின் பட்டியல் பள்ளிவாரியாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த இடங்கள் 30.11.2015 வரை காலியாக வைக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பெற்றோர்கள் நேரடியாக பள்ளி நிர்வாகத்திடமோ, அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர் அலுவலம், மெட்ரிகுலேசன் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் உள்பட ஏதேனும் ஒன்றில் தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பம் அளித்து சேர்க்கை செய்யலாம். விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து தகுதியிருப்பின் உடனடி சேர்க்கை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment