குரூப் 1 பதவியில் துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. இதற்கான, முதன்மை தேர்வு வரும் நவம்பர் 8ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தலைவர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 பதவியில் அடங்கிய 19 துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி- 26, வணிக வரி உதவி ஆணையர்- 21, மாவட்ட பதிவாளர்- 8 பேர் உள்ளிட்ட 74 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இத்ேதர்வுக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்லூரிகளில் டிகிரி தேர்வு எழுதி ரிசல்ட்டுக்காக காத்திருப்பவர்களும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மெயின் தேர்வுக்கு முன்னதாக அவர்கள் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இன்று முதல் தேர்வாணைய இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே, நிரந்தர பதிவு செய்த விண்ணப்பதாரர் இணைய வழி விண்ணப்பத்தில் அவர்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து அப்பதவிகளுக்கு உாிய இதர விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
நிரந்தர பதிவு செய்யாத விண்ணப்பதாரர் நேரடியாக முழு விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். நிரந்தர பதிவில் பதிவு செய்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணத்திலிருந்து மட்டுமே விலக்களிக்கப்படும். ஏற்கனவே, அவர்கள் வகுப்பிலிருந்து வழங்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையில் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணம், தேர்வு கட்டணங்களை வங்கிகள், அஞ்சலகங்கள் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 9ம் தேதி கடைசி நாள். முதன்மை எழுத்து தேர்வு நவம்பர் 8ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். மேலும் விவரங்களை டிஎன்பிஎஸ்சியின் www.tnpsc.gov.in, www.tnpscexams.netல் பார்த்து தெரிந்து கொள்ளலாம். கடந்த ஆண்டு குரூப் 1 தேர்வுக்கு 1 லட்சத்து 62 ஆயிரத்து 722 பேர் விண்ணப்பித்திருந்தனர். தற்போது நடக்க உள்ள குரூப் 1 தேர்வுக்கு சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு பாலசுப்பிரமணியம் கூறினார். தொலைபேசியில் தொடர்பு: தேர்வு குறித்த சந்தேகங்களை 044-2530 0300 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி 1800 425 1002ல் தொடர்பு கொண்டு தெளிவுப்படுத்தி ெகாள்ளலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment