மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடி களை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அதன் நிலை குறித்த தகவல் சேகரித்து வருகின்றனர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. வழக்கத்திற்கு முன்னதாகவே தேர்தல் வந்தாலும் தேர்தலை நடத்தி முடிக்க தேவையான பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
முதல் கட்டமாக தாலுகா அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழைய பதிவுகளை அகற்றி விட்டு, புதியதாக வாக்குப்பதிவுக்கு ஏற்ற வகையில் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.தற்போது ஒவ்வொரு தாலுகாவிலும், தாசில்தார், வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ., ஆகியோர் தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்து, அதன் நிலைமை பற்றிய தகவல்களை சேகரித்து வருகின்றனர். இந்த ஆய்வின் அடிப்படையில், ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்குச்சாவடி விபரங்கள், அதன் கட்டமைப்பு வசதிகள், மின்சாரம், குடிநீர், கழிப்பறை வசதிகள் ஆகியவற்றை சேகரிக்கின்றனர்.
எந்தெந்த இடங்களில் என்னென்ன வசதிகள் தேவை, அதற்கான திட்ட மதிப்பீடு என்ன என்பதை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment