Thursday, July 30, 2015
புதிய 1 ரூபாய் நோட்டு அச்சடிக்க திட்டம்
மத்திய அரசு, ஆண்டுக்கு, 1 ரூபாய் மதிப்பிலான, 15 கோடி கரன்சி நோட்டுகளை அச்சடிக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்கா, ராஜ்யசபாவில் மேலும் கூறியதாவது:ரிசர்வ் வங்கி, 1, 2 மற்றும் 5 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தி விட்டது. அச்சடிக்கும் செலவு அதிகரித்துள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அதனால், 1 ரூபாய் கரன்சியை, மத்திய அரசு அச்சடிக்க உள்ளது. இந்தாண்டு முதல், ஆண்டுக்கு, 1 ரூபாய் மதிப்பில், 15 கோடி கரன்சி நோட்டுகள் அச்சடிக்கப்படும். அதேசமயம், 2 மற்றும் 5 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் திட்டம் எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment