Monday, January 19, 2015
தேசிய வருவாய் தேர்வு இன்று முதல் ஹால் டிக்கெட்
தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை (என்.எம்.எம்.எஸ்.,) தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, இன்று முதல், 'ஹால் டிக்கெட்' வழங்கப்படும் என, அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்த அறிவிப்பு:
இந்த தேர்வு, இம்மாதம் 24ம் தேதி நடக்கிறது. இதற்காக, ஆன் - லைன் மூலம் விண்ணப்பித்த தேர்வர்களின், 'ஹால் டிக்கெட்'டை, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், இன்று முதல் துறையின், 'www.tndge.in' என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதற்காக, ஏற்கனவே பள்ளிக்கு வழங்கப்பட்ட, 'யூசர் ஐ.டி., மற்றும் பாஸ்வேர்டு' மூலம், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது. மத்திய அரசு சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, உதவித்தொகை வழங்க, இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு, தொடர்ந்து கல்வி உதவித்தொகை கிடைக்கும். தமிழகத்தில், இத்தேர்வை எழுத, 1.43 லட்சம் மாணவர் பதிவு செய்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment