தொடக்க கல்வி பட்டயத் தேர்வு எழுதியவர்கள், விடைத்தாள் நகல் பெற, 2ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்து உள்ளார்.அவரது செய்திக் குறிப்பு: இரு ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சி முடித்து, தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுது பவர்களுக்கு, கடந்த ஆண்டு ஜூன் முதல், விடைத்தாள் நகல் வழங்கப்படுகிறது.
விடைத்தாள் நகல் பெறப்பட்ட பின், விருப்பமுள்ள தேர்வர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் எனவும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விடைத்தாள் நகல் பெற, 'www.tndge.in' என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், கட்டணத்தை, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக செலுத்தி, ஆன் - லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பிப்., 2ம் தேதி முதல், 6ம் தேதி வரைவிண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து, தற்போது விடைத்தாள் நகல் வேண்டுபவர்கள், ஒரு பாடத்திற்கு, 70 ரூபாய் செலுத்த வேண்டும்.
தற்போது, புதியதாக விடைத்தாள் நகல் வேண்டுவோர், ஒருபாடத்திற்கு, 275 ரூபாயும், டிச., 30 முதல், ஜன., 5 வரை, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள், ஒரு பாடத்திற்கு, 205 ரூபாய் செலுத்தி, அவர் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், விண்ணப்பிக்க வேண்டும்.மேலும், ஆன் - லைன் கட்டணம், 50 ரூபாய் கூடுதலாக, செலுத்த வேண்டும். ஜூனில் நடக்கும் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு, தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் தேதி, பின் அறிவிக்கப்படும், என அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment