Saturday, January 17, 2015
10ம் வகுப்பு மாணவர் கற்றல் அடைவுத்திறன் ஆய்வு
10-ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் தொடர்பாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட உள்ளது.
10}ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் எவ்வாறு உள்ளது, அவர்கள் பாடத்திட்டங்களில் உள்ள பாடங்களை எவ்வாறு புரிந்துகொண்டுள்ளனர் என்பது தொடர்பாக ஆய்வு நடத்துமாறு தேசிய கல்வி ஆராய்ச்சி-பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) அறிவுறுத்தியுள்ளது.
மொழிப்பாடங்கள், கணிதம், அறிவியல் ஆகியப் பாடங்களை மாணவர்கள் எந்த அளவுக்கு புரிந்து கொண்டுள்ளனர் என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.
பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மாநிலம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆய்வு நடைபெற உள்ளது.தமிழகத்தில் இந்த ஆய்வு நடத்தும் பொறுப்பு அரசுத் தேர்வுகள் இயக்ககத்திடம் வழங்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்துக்குள் இந்த ஆய்வு முடிக்கப்பட்டுவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆய்வுக்கான மாதிரி கேள்வித்தாள்களை தேசிய கல்வி ஆராய்ச்சி-பயிற்சி கவுன்சில் வழங்கியுள்ளது. இந்த ஆய்வை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாக ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மூன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை கற்றல் அடைவுத் திறன் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், இப்போதுதான் முதல் முறையாக 10}ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் ஆய்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆய்வுக்குப் பிறகு தமிழகத்தில் உள்ள 10}ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வித் தரம், கற்பித்தல் முறைகள் போன்றவற்றின் நிலைகளை அறிந்துகொள்ளலாம். அதேபோல், கற்பித்தல் முறைகளில் தேவைப்பட்டால் மாறுதல்களைக் கொண்டுவரவும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment