இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 விடைத்தாள்களில் பக்கங்களின் எண்ணிக்கை ஒரு சில பாடங்களுக்கு குறைக் கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழித்தாள் தேர்வுகளுக்கு கோடுபோட்ட விடைத்தாள்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி 31-ம் வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை ஏறத்தாழ 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
இதேபோல், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 19-ம் தேதி ஆரம்பித்து, ஏப்ரல் 10-ம் தேதி நிறைவடைகிறது. 10-ம் வகுப்பு தேர்வை சுமார் 11 லட்சம் பேர் எழுத உள்ளனர்.
கடந்த 2013-ம் ஆண்டு வரை, எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு முதலில் முதன்மை விடைத்தாள் கட்டு (மெயின் ஷீட்) கொடுக்கப்படும். கூடுதல் விடைத்தாள் தேவைப் படும் மாணவர்கள் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கூடுதல் விடைத்தாள்களை தேர்வுக்கூட கண்காணிப்பாளரிடம் ஒவ்வொரு முறையும் கேட்டு வாங்குவதற்கு நேரம் வீணாகும் என்பதையும், அதேசமயம் ஒரேநேரத்தில் பல மாணவர்கள் கூடுதல் விடைத்தாள் கேட்கும்போது தேர்வுக்கூட கண்காணிப்பாளருக்கும் கடினமாக இருக்கும் என்பதாலும் தேர்வுத்துறை கடந்த 2014-ம் ஆண்டு பொதுத்தேர்வில் புதிய முறையை அறிமுகப்படுத்தியது.
அதன்படி, முந்தைய ஆண்டு பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் எழுதியுள்ள விடைத்தாள் பக்கங்களை ஆராய்ந்து அதற்கேற்ப எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு 32 பக்க விடைத்தாள் கட்டும், பிளஸ்-2 மாணவர்களுக்கு 40 பக்க விடைத்தாள் கட்டும் வழங்கப்பட்டது.
இதனால், மாணவர்களுக்கு கூடுதல் விடைத்தாள் கேட்க வேண்டிய நிலை ஏற்படவில்லை. ஆனால், குறிப்பிட்ட பாடங் களில் ஏராளமான மாணவர்கள் பல பக்கங்களை எழுதாமல் விட்டிருந்தனர். குறைவான பக்கத்துக்குள்ளே அவர்கள் விடைகளை எழுதி முடித்து விட்டனர்.
மாணவர்கள் பதில் எழுதாமல்விட்ட பக்கங்களால் காகிதம் வீணானது. இதன்மூலம் கணிசமான அளவு இழப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. எனவே இந்த குறைபாட்டைப் போக்கும் வகையில், இந்த ஆண்டு முதல் ஒரு சில பாடங்களுக்கு விடைத்தாள் பக்கங்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு தேர்வுத்துறை முடிவுசெய்துள்ளது. அதுமட்டுமின்றி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழித்தாள் தேர்வு களுக்கு கோடுபோட்ட (ரூல்டு பேப்பர்) விடைத்தாள்கள் வழங் கப்பட உள்ளன.
கடந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் பக்கங்களை ஆராய்ந்து அதற்கேற்ப சில பாடங் களுக்கு மட்டும் விடைத்தாள் பக்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதாகவும், காகிதம் வீணாவதை தடுப் பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டி ருப்பதாகவும் அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment