மாணவர்களின் கையெழுத்தை மேம்படுத்தும் பொருட்டு, இந்த ஆண்டு பொதுத்தேர்வில் மொழிப்பாடங்களுக்கு மட்டும் ரூல்டு பேப்பர் பயன்படுத்த தமிழக கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.
அரசு பொதுத்தேர்வில் மொழிப்பாடங்களை எழுதும்போது, சில மாணவர்கள் நேர்க்கோட்டில் சரியான முறையில் எழுதாததால், அவற்றை மிதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே இந்த குறைபாடுகளை களையும் பொருட்டும், மாணவர்களின் கையெழுத்து மேம்படும் வகையிலும், திருத்தும்போது ஆசிரியர்கள் சரியாக விடைகளை மதிப்பீடு செய்வதற்காக வரும் பொதுத்தேர்வில் மாற்றங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மொழிப்பாடங்களுக்கு மட்டும் வழக்கமாக வழங்கப்படும் 'அன் ரூல்ட்' விடைத்தாள்களுக்கு பதிலாக 'ரூல்ட்' விடைத்தாள்கள் வழங்கப்படும் என்று அரசு பொதுத்தேர்வு இயக்குனர் தேவராஜன் அறிவித்துள்ளார்.
மேலும், சோதனை முயற்சியாக கடந்த வருடம் தனித்தேர்வு எழுதிய ஒரு லட்சம் மாணவர்களுக்கு ரூல்டு பேப்பர் கொண்ட விடைத்தாள்கள் கொடுக்கப்பட்டதாகவும், இதற்கு மாணவர்களிடம் நல்ல வரவேற்பு இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இது மாணவர்கள் அதிக விடைத்தாள்கள் பயன்படுத்துவதை குறைப்பதற்கான நடவடிக்கை என்று கூறப்படுவதற்கு அவர் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment