பள்ளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்ட் வழங்கும் திட்டத்தில், மாணவர்களின் ஆதார் எண் விபரங்களையும் சேர்க்க, கல்வித்துறை முனைப்பு காட்டி வருகிறது.
பல்வேறு காரணங்களால் ஏற்படும், பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில், மாணவர்களின் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய, ஸ்மார்ட் கார்ட் வழங்கும் திட்டம், கல்வித்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின்படி, மாணவர்களின் எடை, உயரம், ரத்த வகை, பள்ளி விவரம், குடியிருப்பு, பெற்றோர், வயது, உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யும் பணியை, பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்கொள்கின்றனர்.
இந்த பட்டியலில், மாணவர்களின் ஆதார் எண்களை சேர்க்கவும் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
மாணவர்களின் ஆதார் எண்களை சேகரித்து வைக்கவும், கல்வித்துறை கேட்கும்போது உடனடியாக வழங்குவதற்கு, தலைமையாசிரியர்கள் தயாராக இருக்க வேண்டுமென, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து, அனைத்து துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும், மாணவர்களின் ஆதார் எண் சேகரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
No comments:
Post a Comment