Friday, January 16, 2015
தமிழக அரசு விருது அறிவிப்பு
தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் திருவள்ளுவர், பெரியார், அண்ணா, திரு.வி.க. விருதுகளைப் பெறும் அறிஞர்களின் பெயர்களை முதல்வர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழுக்குத் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர் கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர், பெரியார், அண்ணா, திரு.வி.க. உட்பட பல்வேறு விருதுகளை பெறத் தேர்வு பெற்றோர் பட்டியலை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
விருதுபெறுவோர் விவரம் வருமாறு:
திருவள்ளுவர் விருது - திருக்குறள் க.பாஸ்கரன், தந்தை பெரியார் விருது - டாக்டர் தாவூஜீ குப்தா, அண்ணல் அம்பேத்கர் விருது ஆழி கு.மகாலிங்கம், பேரறிஞர் அண்ணா விருது - பேராசிரியர் கஸ்தூரி ராஜா, பெருந் தலைவர் காமராஜர் விருது - கருமுத்து தி.கண்ணன், மகாகவி பாரதியார் விருது - முனைவர் இளசை சுந்தரம், பாவேந்தர் பாரதிதாசன் விருது - கவிஞர் கண்மதியன், தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது - முனைவர் கரு.நாகராஜன், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - பேராசிரியர் ஏ.எம்.ஜேம்ஸ் ஆகியோருக்கு வழங்கப் படுகிறது.
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் 16-ம் தேதி (இன்று) நடக்கும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விருதுகளை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
விருது பெறுவோருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு பவுன் தங்கப் பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரை ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும். அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 30 பேருக்கு, நிதியுதவி அளிப்பதற் கான அரசாணைகளும் இவ்விழா வில் வழங்கப்படும்.
இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment