மக்களின் சேமிப்பு பழக்கத்தை உயர்த்தவும் எளிதாக நீண்ட காலத்திற்கு சேமிக்கும் வகையிலும் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட தபால் துறையின் 'கிஸான் விகாஸ்' பத்திரத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இத்திட்டம் 1988ல் அறிமுகப்படுத்தப்பட்டு 2011ல் நிறுத்தப்பட்டது. சமீபத்தில் இந்திய மக்களின் சேமிப்பு 30 சதவீதமாக குறைந்ததையொட்டி பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு இத்திட்டத்தை கடந்தாண்டு நவ., 17ல் அறிமுகப்படுத்தியது.
தொடர்ந்து நாடு முழுவதுமுள்ள அனைத்து தலைமை மற்றும் துணை தபால் நிலையங்களில் பத்திரங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுத்தது. இதில் ரூ.1000, 5000, பத்தாயிரம், ஐம்பதாயிரம் பிரிவுகளில் தொகையை முதலீடு செய்யலாம். தனிநபர் மற்றும் இருவர் கூட்டாக சேர்ந்து எத்தனை பத்திரங்கள் வேண்டுமானாலும் வாங்கலாம். முதலீட்டு தொகை 100 மாதங்களில் இரு மடங்காக உயரும். ஒரு தபால் நிலையத்தில் செய்த முதலீட்டை இந்தியாவிலுள்ள எந்த தபால் நிலையத்திற்கும் மாற்றலாம். தேவைப்பட்டால் குறைந்தபட்சம் 30 மாதங்களில் அல்லது அதற்கு பிறகு அபராதத்துடன் பணத்தை எடுத்து கொள்ள முடியும். தபால் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தலைமை மற்றும் துணை தபால் நிலையங்களில் இந்த பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அனைத்து தரப்பினருக்கும் முதலீடு செய்ய ஏற்ற திட்டம் என்பதால் இந்த பத்திரங்களை ஏராளமானோர் வாங்குகின்றனர் என்றார்.
No comments:
Post a Comment