Saturday, January 17, 2015
கிராமப்புற மாணவர் வாசிக்கும் திறன் அதிகரித்துள்ளது.ஆய்வில் தகவல்
தமிழக கிராமப்புற பள்ளி மாணவர்களிடம், தமிழ், ஆங்கிலம் வாசிக்கும் திறன் அதிகரித்து உள்ளதாக, தனியார் நிறுவன ஆய்வில் தெரிய வந்துள்ளது.
'பிரதம்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், 2006 முதல், கிராமங்களில் உள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்லுதல்; அவர்கள் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்து, 'ஏசர்' என்ற தலைப்பில் வெளியிடுகிறது. இந்த ஆண்டு, நாடு முழுவதும், 577 மாவட்டங்கள்; 16,497 கிராமங்களில், மூன்று முதல், 16 வயதுக்குட்பட்ட, 5,70 லட்சம் குழந்தைகளிடம் ஆய்வு நடந்தது. நாடு முழுவதும் கட்டாய கல்விச் சட்டம் அறிமுகமாகி உள்ள நிலையில், 'ஏசர்' குழு, 15,206 அரசுப் பள்ளிகளையும் ஆய்வில் சேர்த்துக் கொண்டது. தமிழகத்தில், 29 மாவட்டங்கள்; 823 கிராமங்கள்; 17,335 வீடுகள்; 3571, 3 - 5 வயதில், 3571; 6 - 14 வயதில்,13, 948; 15 - 16 வயதுடைய, 2,674 குழந்தைகளிடம், ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வு முடிவுகள்
* 6 - 14 வயதில், பள்ளி சேராத குழந்தைகள் எண்ணிக்கை, 2013 ஆண்டை விட, 2014ல் சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும், தேசிய அளவை விட மிக குறைவாக உள்ளது.
* 6 - 14 வயதில், தனியார் பள்ளிகளில் சேர்ந்த குழந்தைகள் எண்ணிக்கை, ஆண்டு தோறும் அதிகரித்து உள்ளது. 2014ல், 31.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, தேசிய அளவான, 30.8 சதவீதம் விட அதிகம்.
* மூன்றாம் வகுப்பு மாணவர்களில், முதல் வகுப்பு தமிழ் பாடத்தை வாசிக்கும் திறன்
பெற்றவர்கள் எண்ணிக்கை, 2013ல், 29 சதவீதம்; 2014ல், 37.9 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
* ஐந்தாம் வகுப்பு மாணவர்களில், இரண்டாம் வகுப்பு தமிழ் பாடத்தை வாசிக்கும் திறன் பெற்றவர்கள் எண்ணிக்கை, 2013ல், 31.9 சதவீதம்; 2014ல், 46.9 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
* கணித பாடத்தை படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
* ஐந்தாம் வகுப்பு மாணவர்களின், ஆங்கில வார்த்தைகளை வாசிக்கும் திறன், 2013ல், 57.7 சதவீதம்; 2014ல், 65.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, தேசிய அளவான, 49.2 சதவீதத்தை விட அதிகம்.
* மூன்றாம் வகுப்பு மாணவர்களின் ஆங்கில வார்த்தைகள் வாசிப்பு திறனும் அதிகரித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment