இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, October 07, 2014

சுத்தம் மற்றும் சுகாதாரம் காக்க "தூய்மையான பள்ளி' திட்டம்


மாணவர் மத்தியில் சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், "தூய்மையான பள்ளி' திட்டம், ஒன்பதாம் தேதி அறிமுகமாகிறது. அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அறிமுகமாகும் இத்திட்டத்தின் முக்கிய அம்சம், சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை மாணவர் மத்தியில் ஏற்படுத்துவது, பள்ளி சூழ்நிலையை ஆரோக்கியமாக மாற்றுவதாகும். முதற்கட்டமாக, காலை நேர பிரார்த்தனை கூட்டத்தில், சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து மாணவர் உறுதிமொழி வாசிப்பது, பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும் தனிநடிப்பு போட்டி நடத்துவது, மாணவர் பங்கேற்கும் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்படும்.

அடுத்ததாக பள்ளி வளாகத்தை தூய்மைபடுத்துதல், விளையாட்டு மைதானம் பராமரித்தல், குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரித்தல், சத்துணவு கூடம், சமையலறை மற்றும் சமைக்கும் பாத்திரங்களை தூய்மையாக வைத்திருத்தல், தலைமை ஆசிரிய அறை மற்றும் வகுப்பறைகளை தூய்மைபடுத்தப்படும். நூலகம், ஆய்வகத்தில் ஒட்டடை அகற்றுதல், பழுதடைந்த மேஜை, நாற்காலிகளை புதுப்பித்தல், பயன்பாடற்ற பொருட்களை அகற்றுதல், பள்ளி கட்டிடங்களின் பழுதை சரிசெய்தல், சுவர்களுக்கு வெள்ளையடித்தல், கட்டிட ஜன்னல், கதவுகள் மற்றும் மின்விசிறி, மாணவர் இருக்கை, அலமாரி, "டிவி', கம்ப்யூட்டர் மற்றும் லேப்-டாப் போன்றவற்றை தூசி படியாமல் தூய்மைபடுத்துதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

தினமும் பல் துலக்குதல், விரல்களில் நகம் வெட்டுதல், தூய்மையான ஆடை அணிதல், சாப்பிடும் முன் கைகளை கழுவுதல், சுகாதாரமான முறையில் உணவு சாப்பிடுதல், குப்பை தொட்டியில் வீசுதல் போன்ற நல்ல பழக்கங்களை மாணவர் மத்தியில் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஒன்பதாம் தேதி பள்ளிகளில் துவங்கப்படும் இத்திட்டத்தை, வரும், 2015 ஜூன், 15 வரை, அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் செயல்படுத்துமாறு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. "தூய்மையான பள்ளி' திட்டத்தின் செயல்பாடு குறித்து, பள்ளிகளில் ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment