தேர்தல் பணியின்போது, இறப்போருக்கு வழங்கப் படும் நிவாரணத் தொகை, 5 லட்சம் ரூபாயில் இருந்து, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில், லட்சக்கணக்கான ஊழியர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்கள் தேர்தல் பணியில் இருக்கும்போது இறந்தால், அவர்கள் குடும்பத்திற்கு, 5 லட்சம் ரூபாய், நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. இதை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க, தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்தது. அதை ஏற்று, தமிழக அரசு நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க, அனுமதி வழங்கி, அரசாணை பிறப்பித்து உள்ளது. இதுகுறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது: தேர்தல் பணியின்போது, இறப்போரின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் இறந்தோரின் குடும்பத்திற்கு, 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. மீதம், 5 லட்சம் ரூபாய் விரைவில் வழங்கப்படும், என்றார்.
No comments:
Post a Comment