கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட அனைவரும் இணையதளம் மூலமும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சென்னைதலைமைச் செயலகத்தில் பிரவீண்குமார் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
தமிழக தலைமைத் தேர்தல் அலுவலகத்தின் இணையதளத்தின் வழியாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம் . ங்ப்ங்ஸ்ரீற்ண்ர்ய்ள்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய்ங்ழ்ங்ஞ்ண்ள்ற்ழ்ஹற்ண்ர்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்யலாம்.
பொதுச் சேவை மையங்கள் மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்கலாம்.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் போது, ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் தனியான எண் வழங்கப்படும். அதன் மூலம், அந்த விண்ணப்பத்தின் நிலையை எளிதாக அறிந்து கொள்ள முடியும். கல்லூரிகளில் 18 வயது நிரம்பிய மாணவ-மாணவிகளின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென ஒவ்வொரு கல்லூரியில் தேர்தல் ஆணையத்தின் தூதராக ஒரு மாணவர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் ஆயிரத்து 400 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன் மூலம், வாக்காளர் அடையாள அட்டைகள் தவறில்லாமல் அச்சிட வழி ஏற்படும்.
செல்போன் வசதி: வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை இணையதளம் (ங்ப்ங்ஸ்ரீற்ண்ர்ய்ள்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய்) மூலம் அறியலாம். அடையாள அட்டை எண் தெரியாவிட்டால் தந்தை பெயர், வாக்காளர் பெயர் ஆகியவற்றை இணையதளத்தில் அதற்கான பக்கத்தில் தட்டச்சு செய்து அறிந்து கொள்ளலாம்.
மேலும், வாக்காளர் அடையாள அட்டையின் எண் தெரிந்தால், அதைக் கொண்டு தேர்தல் ஆணையத்தின் செல்போன் வசதியை (94441 23456) பயன்படுத்தி பட்டியலில் பெயர் இருக்கிறதா? எந்த வாக்குச் சாவடியில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த செல்போன் சேவை புதன்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வரும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பை ஊக்குவிக்க மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பேரணிகள், ஓவியங்கள், மனிதச் சங்கிலிகள் உள்பட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை: தமிழகத்தில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின் போது 60 ஆயிரத்து 418 வாக்குச் சாவடிகள் இருந்தன. இப்போது, 3 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றார் பிரவீண்குமார்.
No comments:
Post a Comment