கல்வி மாவட்ட வாரியாக சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளின் தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளதால், அதற்கான பரிந்துரை அறிக்கையை நவ.,15க்குள் வழங்க, சுற்றுச்சூழல்துறை இயக்குனர் மல்லேசப்பா உத்தரவு பிறப்பித்துள்ளார்.பள்ளிகளின் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களுக்கு, அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கை:
கல்வி மாவட்ட வாரியாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்தும் பள்ளிகளில் உள்ள தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்களுக்கு, 10,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை பரிசு வழங்கப்படும், என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி கல்வி மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 10 முதல் 15 தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்களை கண்டறிந்து, அதுகுறித்து அப்பள்ளிகளின் செயல்பாட்டு அறிக்கையை, அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளின் பரிந்துரைகளுடன் தலைமையாசிரியர்கள், நவ.,15க்குள் சென்னையில் உள்ள எங்கள் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தேர்வு பெற்ற பள்ளிகளுக்கு, பின்னர் பரிசு வழங்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment