அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு, பிற்படுத்தப்பட்ட நலத்துறை சார்பில் வழங்கப்படும், முதல்வர் தகுதி பரிசுக்கான, "கட்-ஆப்' மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெறும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களில், முதல், 500 இடங்களை பெற்ற மாணவர்; முதல், 500 இட மாணவியருக்கு அரசின் சார்பில், உதவித்தொகை வழங்கப்படுவது வழக்கம்.
பட்டய மற்றும், பட்டப்படிப்பு முடிக்கும் வரை, ஆண்டுக்கு, 3,000 ரூபாய் வீதம், இவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். கடந்த ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தாண்டு நடந்த, பிளல் 2, பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான, "கட்-ஆப்' மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. 1,167 மதிப்பெண் பெற்ற மாணவர்களும், 1,170 மதிப்பெண் பெற்ற மாணவியரும், பரிசு பெற விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் பட்டியல், ஜாதிச்சான்று, கல்லூரி படிப்பதற்கான, "போனபைடு' சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன், அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலரை, அணுக வேண்டும்.
No comments:
Post a Comment