இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, August 23, 2013

அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களின் தினசரி வருகை பதிவுகளை, ஆன்-லைன் மூலம், பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், நிர்வாக செயல்பாடு அனைத்தும், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகிறது. அரசு உத்தரவு, விவரம் கேட்பு, சேமிக்கும் தகவல், விண்ணப்பித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும், தற்போது, ஆன்-லைன் மூலமாகவே பரிமாறப்படுகின்றன. இந்நிலையில், கடந்த ஆண்டில், ஒவ்வொரு பள்ளியிலும், படிக்கும் மாணவ, மாணவியர், அங்குள்ள கட்டட மற்றும் இட வசதி, உள்கட்டமைப்பு வசதி மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும், ஆன்-லைன் மூலம் பதிவு செய்யும் பணி நடந்தது.

இதன் அடுத்த கட்டமாக, தற்போது, பள்ளி துவங்கிய உடன் எடுக்கப்படும், மாணவர்கள் தினசரி வருகை பதிவுகளை, அன்றன்றே காலை, 10:00 மணிக்குள், ஆன்-லைனில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும், தங்களது, தினசரி வருகையை, ஆன்-லைன் மூலம் பதிவு செய்கின்றன. இதன் மூலம், தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தும், பள்ளியின் வருகையை வகுப்பு வாரியாக தெரிந்து கொள்ள முடியும் நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது

: வருகை பதிவேடுகளை, நோட்டுகளில் மட்டும் பதிவு செய்யும் போது, தலைமை ஆசிரியர்களுக்கு தகுந்தது போல், பல மாற்றங்களும் இருக்கும். மாணவர் எண்ணிக்கையை, அதிகமாக காட்டுபவர்களும் உண்டு. அதே போல், வேண்டப்பட்ட ஆசிரியர்கள் தாமதமாக வந்தாலோ, வராமல் இருந்தாலோ, அவர்களுக்கு வருகை பதிவு செய்வதும் நடந்ததுண்டு. ஆனால், தற்போது, ஆன்-லைன் மூலம் காலை, 10:30 மணிக்குள் வருகை பதிவுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பின், திடீர் ஆய்வுக்கு அதிகாரிகள் வரும் பட்சத்தில், அதில் மாற்ற முடியாது என்பதால், மாட்டிக் கொள்ள நேரிடும். இதனால், முறைகேடு செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment