சாதரண இடைநிலை ஆசிரியர்களை தவிர மற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அதாவது 01.01.2011க்கு முன்னர் தேர்வு/சிறப்பு நிலை முடித்தோர்க்கு PP எனப்படும் தனி ஊதியம் ரூ.750/- வழங்கியது தவறு என்றும் மேலும் 31.12.2005க்கு பின்னர் தேர்வு / சிறப்பு நிலை முடித்தவர்களுக்கு SA எனும் சிறப்புப்படி ரூ.500 அதாவது 01.01.2006 முதல் 31.12.2010 வரை தேர்வு / சிறப்பு நிலை முடித்தவர்களுக்கு வழங்கியதும் தவறு என்றும் இவ்விரு பணத்தையும் அரசு கணக்கில் திரும்ப செலுத்த தணிக்கை குழு அறிக்கை அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து நம் இணையதளக்குழு உரிய ஆசிரியர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, தலைமையாசிரியர்கள் ஓய்வு பெறும் பள்ளிகளில் தணிக்கை செய்வது வாடிக்கை அவ்வாறு தணிக்கை செய்யும் போது இதை தவறு என சுட்டிக்காட்டி, இவ்வாறு பெறப்பட்ட முழு பணத்தையும் திருப்பி செலுத்த வேண்டு என உத்தரவிட்டுள்ளனர். இதனை மேல்நிலை அலுவலர்களும் உறுதி செய்துள்ளனர். இதனால் பல ஆசிரியர்கள் பணத்தை திருப்பி செலுத்தி வருகின்றனர். சிலர் தங்கள் மாநில அமைப்பிற்கு இது குறித்து அரசிடம் விளக்கம் பெற தகவல் தந்து அவகாசம் கேட்டுள்ளனர்.
இம்முறை உறுதியானல் இடைநிலை ஆசிரியர் மட்டத்தில் பெரும் குழப்பமும் ஊதிய முரண்பாடும் ஏற்படும் என்பதால், மதிப்புமிகு ஆசிரிய சங்கங்கள் இது குறித்து உரிய விளக்கத்தை அரசிடம் பெற்று இவ்வூதிய முறையால் ஏற்படும் பாதிப்புகளை களைய அனைத்து ஆசிரியர்கள் சார்பாக ்பணிவோடு வேண்டுகோள் வைக்கிறது.
No comments:
Post a Comment