டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வு வரும் 25ம் தேதி நடக்கிறது. 17லட்சத்து 6, 552 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஹால்டிக்கெட் கடந்த 13ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஹால்டிக்கெட் வெளியாகவில்லை. விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்தாததால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக டிஎன்பிஎஸ்சி தரப்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் கட்டணம் செலுத்தியவர்களுக்கும் ஹால்டிக்கெட் இதுவரை கிடைக்காததால் விண்ணப்பித்தவர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். இதுகுறித்து தேர்வர்கள் சிலர் கூறுகையில், ‘விண்ணப்பித்த பிறகு ஒவ்வொருவரின் இமெயில் முகவரிக்கும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் இருந்து தகவல் வந்தது. அதில் கட்டணம் செலுத்தவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரிக்கையில், ‘
கட்டணம் செலுத்தியதற்கான தகவல் அஞ்சலகம் மற்றும் வங்கியிலிருந்து டிஎன்பிஸ்சிக்கு வரவில்லை. கட்டணம் செலுத்தியிருந்தால் அதற்கான படிவத்தை ஸ்கேன் செய்து அனுப்புங்கள்‘ என்றனர். அனுப்பிய பிறகும் இதுவரை கிடைக்கவில்லை” என்றனர்.
No comments:
Post a Comment