தமிழக பள்ளிகளில் துவங்கப்பட்டுள்ள, "செஸ் கிளப்' நிதியின்றி திணறுவதால், ஆக.,23ம் தேதி, மாவட்டம்தோறும், நடைபெற உள்ள செஸ் போட்டியில், மாணவர்களை பங்கேற்க வைக்க, விளையாட்டு அலுவலர்கள் தயக்கத்தில் உள்ளனர். மாவட்டம்தோறும், அரசு பள்ளிகளில், செஸ் கிளப் துவங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது;
ஒரு பள்ளியில், சராசரியாக, 1000 மாணவர்கள் உள்ள நிலையில், செஸ் போர்டு வாங்க, 2011-12ல், 900 ரூபாய் வழங்கப்பட்டது. இதில், ஆறு அல்லது ஏழு போர்டுகள் மட்டுமே வாங்கப்பட்டதால், அனைவருக்கும் கற்றுத்தர முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, உடனடியாக, அனைத்து மாவட்டங்களிலும், வட்டார அளவில் செஸ் போட்டி நடத்த வேண்டும். மாவட்ட அளவில், ஆக., 23ம்தேதி நடைபெறும் போட்டியில் பங்கேற்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், வட்டார அளவில், போட்டிக்கு செல்லவே நிதியின்றி, பங்கேற்க முடியாத நிலையில், போதிய பயிற்சியின்றி, பெயரளவில் மாவட்ட விளையாட்டு போட்டிக்கு சிலரை மட்டும் அழைத்து செல்ல வேண்டி உள்ளது என, உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment