பி.எட்., படிப்பிற்கான விண்ணப்பங்கள் விற்பனை, இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை, இப்படிப்பிற்கு, 10 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன.தமிழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 600க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், 3,000 பி.எட்., இடங்களும், தனியார் கல்லூரிகளில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.எட்., இடங்களும் உள்ளன. இப்படிப்பிற்கான விண்ணப்ப வினியோகம், 13 ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களிலும், கடந்த, 9ம் தேதி துவங்கியது.
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிப்பவர்களுக்கு, உடனடியாக ஆசிரியர் வேலை கிடைப்பதால், பி.எட்., சேர்வதில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.இப்படிப்பிற்கு இதுவரை, 10 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன.இது குறித்து, பி.எட்., மாணவர் சேர்க்கை செயலர் பரமேஸ்வரி கூறுகையில், ""இந்தாண்டு, பி.எட்., படிப்பிற்கு, 13 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, 10,800 விண்ணப்பங்கள் விற்பனையானது. இந்தாண்டு, 12 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார்.
No comments:
Post a Comment