தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 600க்கும் மேற்பட்ட, தனியார் கல்வியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பல்கலையில், பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடங்கள், கடந்தாண்டு, செப்டம்பர் முதல் காலியாக இருந்தது.
இதையடுத்து, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியை தேர்வு செய்யும் பணி நடந்தது. இப்பணி முடிந்து, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், இணை பேராசிரியராக பணியாற்றிய, மணிவண்ணன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர், விஸ்வநாதன் கூறுகையில்,
""பதிவாளர் நியமனத்திற்கு, ஆட்சிமன்ற குழு அனுமதியளித்துள்ளது. இரு மாதங்களில் பதிவாளர் தேர்வு பணிகள் முடிந்து விடும்,'' என்றார்.
No comments:
Post a Comment