்:ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் 410 பேரை, போலீசார் கைது செய்தனர்.இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஊழியருக்கு இணையான சம்பள உயர்வு வழங்க வேண்டும்; புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, முந்தைய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுரளி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சந்திரசேகர், பொருளாளர் ஜெயலட்சுமி, செயலாளர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தனர். பல்வேறு அரசு ஊழியர்சங்க நிர்வாகிகள் பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.போலீஸ் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியஆசிரியர்களை, போலீசார் கைது செய்து, வாகனங்களில் ஏற்றினர். கைகளில் அமைப்பு கொடியுடன் இருந்த ஆசிரியர்கள் சிலர் ஓடிச்சென்று, ரோட்டில் அமர்ந்து கோஷமிட்டபடி மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி, வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 282 பெண்கள் உட்பட 410 ஆசிரியர்களை, போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment