கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம், எம்.எஸ்.டபிள்யூ., எம்.ஏ.(எல்எம்), எம்.பி.ஏ., எம்.ஏ(எச்ஆர்எம்), எம்.சி.ஏ., எம்.எஸ்சி.(ஐ.டி), எம்.எஸ்சி. (சிஎஸ்) எம்.எஸ்சி.(சிஎஸ்டி) பட்ட மேற்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் புதன்கிழமை மாலை வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.unom.ac.in, www.chennaionline.com/results, www.schools9.com, www.indiaresults.com, http://results.southindia.com, http://results.webdunia.com, http://kalvimalar.com/results.asp, www.examresults.net ஆகிய இணைய முகவரிகளில் பார்த்துக் கொள்ளலாம். குறுஞ்செய்தி (நஙந) மூலம் தேர்வு முடிவு: தேர்வு முடிவுகளை 56263 என்ற எண்ணுக்கு தங்ள்ன்ப்ற் என டைப் செய்து சிறிது இடைவெளி விட்டு மசஞஙடஎ என்று டைப் செய்து மீண்டும் இடைவெளி விட்டு பதிவு எண்ணை டைப் செய்து குறுஞ்செய்தி அனுப்பியும் தெரிந்து கொள்ளலாம்.
விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய, சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் பெயரில் செலுத்தத்தக்க வகையில் ரூ.750-க்கு வரைவோலை எடுத்து, வரும் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கடந்த 3 செமஸ்டர்களில் அனைத்து "தியரி' தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று, நான்காவது செமஸ்டரில் ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியுற்றவர்கள் மட்டும் உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். முதுநிலை மாணவர்கள் ரூ. 350, தொழில்படிப்பு மாணவர்கள் ரூ.600 கட்டணமாகச் செலுத்தி உடனடித் தேர்வில் பங்கேற்கலாம். இதற்கான வங்கி வரைவோலையை வரும் 10-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். உடனடித் தேர்வு வரும் 27-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, அண்ணா நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் நடைபெறும். தேர்வு நுழைவுச் சீட்டுகளை கல்லூரி இணையதளத்தில் வரும் 25-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment