சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள கபாடியா, வரும், 28ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக, தற்போதைய சுப்ரீம் கோர்ட் நீதிபதி, அல்தாமஸ் கபீரை நியமிக்கும்படி, பரிந்துரை செய்துள்ளார்.
இது குறித்து சட்ட அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:
சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதிகளே, தலைமை நீதிபதிகளாக நியமிக்கப்படுவது வழக்கம். இந்த அடிப்படையில், அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து, ஓய்வு பெறும் தலைமை நீதிபதியின் பரிந்துரையை கேட்கும் சட்ட அமைச்சர், அவர் பரிந்துரைத்த பெயரை, பிரதமரின் ஒப்புதல் பெற்று, ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார்.
தற்போதைய தலைமை நீதிபதியாக உள்ள கபாடியா, புதிய தலைமை நீதிபதியாக, அல்தாமஸ் கபீரை நியமிக்க பரிந்துரை செய்துள்ளார்.
அல்தாமஸ் கபீர், 2005ம் ஆண்டிலிருந்து, சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றி வருகிறார். இவர், தன், 65வது வயது வரை, அதாவது, 2013, ஜூலை 18 வரை பதவியில் தொடர்வார்.
No comments:
Post a Comment