இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, September 21, 2012

உடம்பை உடைக்கும் புத்தக பை  -Dinamalar Article

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சுமை, அங்கு நடத்தப்படும் பாடம் மட்டுமல்ல. அவர்கள் சுமந்து செல்லும் புத்தக பையும் தான். காலையில், புத்தக பையை மாட்டிக்கொண்டு பள்ளி செல்லும் குழந்தையை பார்த்தால் ஒரு நிமிடம் நின்று அவர்களை பார்க்கத் தோன்றும். அந்தளவு அழகாக இருக்கும். குழந்தை, பெரிய பையை கொண்டு செல்கிறார்கள் என சில பெற்றோரும் பெருமையாக நினைக்கின்றனர். உண்மையில் நடப்பது என்ன தெரியுமா? அளவுக்கு அதிகமான பாடப் புத்தகங்களை சுமந்து செல்லும் குழந்தைகளுக்கு முதுகு வலி, கழுத்து வலி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் வருகின்றன என ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன. குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், கல்லூரி மாணவர்கள், மார்க்கெட்டிங் செய்வோர், கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் ஆகியோர் அதிக எடை கொண்ட பையை சுமந்து செல்கின்றனர். இவர்களுக்கு முதுகு வலி, கழுத்து வலி, தண்டுவடம் பாதிப்பு, கூன் விழுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக மக்கள் தொகையில் 40 - 80 சதவீதம் பேருக்கு முதுகுவலி பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிச் சுமை, ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காருதல், உடல் உழைப்பு இல்லாமை, எடை அதிகரிப்பு ஆகிய காரணங்களாலும் இன்றைய இளைஞர்கள் முதுகுவலியால் அவதிப்படுகின்றனர்.

எங்கு பாதிப்பு அதிகம்:

இது குறித்து பெங்களூரு தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : "குழந்தைகள் சுமக்கும் "பை'களால் கழுத்து மற்றும் முதுகில் மேல் பகுதியில் கடும் வலி உண்டாகிறது. முதுகின் மேல் பகுதி (40 சதவீதம்), கழுத்து ( 27 சதவீதம்), தோள் பட்டை ( 20 சதவீதம்), முன் கை மணிக்கட்டு (7 சதவீதம்), முதுகின் கீழ் பகுதி (6 சதவீதம்)யில் வலி உண்டாகிறது'. இப்பிரச்னையில் இருந்து தப்பிக்க, தேவையான புத்தகங்களை மட்டும் குழந்தைகள் எடுத்துச் செல்ல ஆசிரியர்கள் அறுவுறுத்த வேண்டும். சில பள்ளிகளில் அனைத்து புத்தகங்களையும் எடுத்துவரச் சொல்கின்றன. இதற்கு பதில், பள்ளிகளிலேயே மாணவர்களுக்கான "லாக்கர்களை' ஏற்டுத்த பள்ளி நிர்வாகங்கள் முன்வர வேண்டும். இவ்வாறு ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு:

பைக்கில் அதிக தூரம் செல்ல வேண்டி இருந்தால் பைகளை தோளில் தொங்க விடாமல், பைக்கின் முன்பகுதியில் வைத்துச் செல்லலாம். ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காரவோ, நிற்கவோ கூடாது. இதற்கு பதில், சிறிது நேரம் ஓய்வு அல்லது வாக்கிங் அல்லது ரன்னிங் போகலாம். மன அழுத்தம் உடலின் தசைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இச்சமயத்தில் சிறிது நேரம் மூச்சுப் பயிற்சி செய்யலாம். புகை பிடிப்பது முதுகெலும்பில் பாதிப்பை ஏற்படுத்தும். அப்பழக்கத்தை அறவே விட்டொழியுங்கள். முறையான தலையணைகளை பயன்படுத்துவதன் மூலம், கழுத்து வலியில் இருந்து தப்பிக்கலாம்.

எப்படி இருக்க வேண்டும் புத்தக பை:
* தோளில் தொங்க விடப்படும் பை, நன்கு அகலமாக, பட்டையாக இருக்கு வேண்டும்
. * ஒற்றை பட்டையை தவிர்க்க வேண்டும். - குழந்தையின் எடையில், 10 - 20 சதவீத எடைக்கு மேல் பையின் எடை இருக்கக் கூடாது. - புத்தக பையுடன் நடக்கும் போது, சாய்ந்தவாறு நடக்கக்கூடாது. - படத்தில் உள்ளது போல, புத்தக பை, சரிந்து இருக்குமானால், பையின் எடை அதிகரித்து குழந்தை முதுகுத் தண்டு பாதிக்கப்படும

். * பையின் அளவு, குழந்தையின் முதுகின் அளவை விட, அதிகமாக இருக்கக்கூடாது. * "பை'யின் பின்புறம் கீழே "பிடி' இருப்பது நல்லது. * தேவையில்லாத புத்தகம், நோட்டுகளை எடுத்துச்செல்ல வேண்டாம் என குழந்தைகளுக்கு அறுவுறுத்த வேண்டும்

No comments:

Post a Comment