தமிழகத்தில் இரண்டாவது கட்டமாக, 16 மாவட்டங்களில் பயோ -மெட்ரிக் பதிவு முறை, நடைபெற உள்ளது. அப்போது ரேஷன் கார்டு எண்ணை பதிவு செய்ய, அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மின்னணு ரேஷன் கார்டுகளை நடைமுறைக்கு கொண்டு வர, பணிகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் போலி கார்டுகளை கண்டறியவும், முறைகேடுகளை தடுக்கவும் முடியும். தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் அடிப்படையில், சம்மந்தபட்டவர்களின் கைரேகை மற்றும் கண் விழிகள் "பயோ மெட்ரிக்' முறையில் பதிவு செய்யப்படுகிறது.
முதல் கட்டமாக புதுக்கோட்டை, திருச்சி, கரூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 16 மாவட்டங்களில்,"பயோ- மெட்ரிக்' முறையில் பதிவு நடந்து வருகிறது. இரண்டாம் கட்டமாக, திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் நடக்கிறது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் அடிப்படையில், "பயோ- மெடரிக்' பதிவு முறை விரைவில் நடத்த, மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, ரேஷன் கடைகளின் அருகே பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, கைரேகை, கருவிழி பதிவு செய்யும் போது, அவர்களது ரேஷன் கார்டு எண்ணையும் பதிவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment