பள்ளிப் பாடப் புத்தகத்தில், முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேய பொறியாளர், "பென்னிகுயிக்' வாழ்க்கை வரலாற்றைச் சேர்ப்பது தொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை பரிசீலித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது. முல்லைப் பெரியாறு அணையை, ஆங்கிலேய பொறியாளர் "பென்னிகுயிக்' கட்டினார்.
தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில், எடுத்த காரியத்தை நிறைவேற்றுவதற்காக, தன் சொத்துக்களை விற்று, அணையைக் கட்டினார். அவரின் உருவச் சிலையை, "லோயர் கேம்பில்' அமைக்க, தமிழக அரசு உத்தரவிட்டு, பணிகள் நடந்து வருகின்றன. அவரின் வாழ்க்கை வரலாற்றைப் பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என, தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், அரசிற்கு கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று, பள்ளிக்கல்வித் துறை, "பென்னிகுயிக்' வாழ்க்கை வரலாற்றை, பாடப் புத்தகங்களில் சேர்ப்பது தொடர்பாக, தீவிரமாகப் பரிசீலிக்கிறது.
வரும் கல்வியாண்டில், "பென்னிகுயிக்' வாழ்க்கை வரலாறு, பள்ளிப் பாடப் புத்தக்கத்தில் இடம் பெற வாய்ப்புகள் உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment