இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, September 27, 2012

வி.ஏ.ஓ., தேர்வு 150 மையங்கள் பதற்றம்

""வி.ஏ.ஓ., @தர்வுநடக்கும் மையங்களில், 150 மையங்கள், பதற்றம் மிகுந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த மையங்கள், "வெப்-கேமரா' மூலம் கண்காணிக்கப்படவுள்ளது,"" என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் தெரிவித்தார்.

தேர்வாணைய அலுவலகத்தை, முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்துவிட்டு சென்றபின், தேர்வாணைய அலுவலர்கள், பணியாளர்கள் மத்தியில், தலைவர் நடராஜ் பேசியதாவது:நீங்கள் விரும்பியபடி, உங்களுக்கு தேவையான வசதிகளை அளிக்கும் வகையில், புதியகட்டடம் கட்டப்பட்டுள்ளது. பணியாளர்கள், மகிழ்ச்சியான சூழலில் வேலைபார்த்தால் தான், பணிகள் சிறப்பாக இருக்கும். அந்தவகையில், புதியஅலுவலகம், உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.வரும் ஞாயிற்றுக் கிழமை நடக்கும், வி.ஏ.ஓ., தேர்வு, நம் முன் உள்ள சவால்.

Oஇந்த தேர்வை, வெற்றிகரமாக நடத்தி முடிக்கவேண்டும்; கண்டிப்பாக செய்வோம் என்ற நம்பிக்கைநம்மிடம் உள்ளது.இவ்வாறு நடராஜ் பேசினார். பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

வி.ஏ.ஓ., தேர்வு, 3,473 மையங்களில் நடக்கின்றன. 9.72 லட்சம் பேர், தேர்வுக்கு விண்ணப்பித்தனர். எவ்வளவு பேர் எழுது கின்றனர் என்பது, 30ம் தேதியன்று தெரியும். அனைத்து தேர்வு மையங்களிலும், தேர்வுப் பணிகளை, வீடியோ எடுக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.150 மையங்கள்,பதற்றம் மிகுந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த மையங்களில், "வெப்-கேமரா' மூலம், எனது அறையில் இருந்தபடியே, 150 மையங்களையும் கண்காணிக்க, ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

குரூப்-2 கலந்தாய்வு: ஏற்கனவே நடந்த குரூப்-2 தேர்வு தொடர்பாக, சென்னை, ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. இதனால், கலந்தாய்வு நடத்த முடியாத நிலை இருந்து வந்தது. இவ்வழக்கில், தேர்வாணையத்திற்கு சாதகமாக, நேற்று தீர்ப்பு வந்துள்ளது.தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, ஒரு வாரத்திற்குள், கலந்தாய்வு நடத்தப்படும். இதன்மூலம், 3,500 பணியிடங்கள் நிரப்பப்படும்.இவ்வாறு நடராஜ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment