டீசல் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் போன்றவற்றால் விலைவாசி அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
டீசல் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் போன்றவற்றால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகம் உயர்ந்து விட்டதால் அகவிலைப்படியை கணிசமான அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 65 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இதை உயர்த்துவது தொடர்பாக கடந்த சில தினங்களாக மத்திய அரசு தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. அகவிலைப்படி உயர்வு காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் தங்களது அடிப்படை சம்பளத்தில் இனி 75 சதவீதத்தை அகவிலைப்படியாக பெறுவார்கள். இந்த உயர்வு கடந்த ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து முன் தேதியிட்டு வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வு காரணமாக 80 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும்,ஓய்வூதிய தாரர்களும் பயன்பெறுவார்கள்.
No comments:
Post a Comment