மருத்துவ பல்கலை துணைவேந்தர் ஓய்வு வயது 70 ஆக உயர்வு-09-08-2012l சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை மற்றும் உடற்கல்வி, விளையாட்டு பல்கலை துணைவேந்தர்களின் ஓய்வுபெறும் வயதை, 70 ஆக உயர்த்தி, கவர்னர் ரோசையா உத்தரவிட்டுள்ளார். துணைவேந்தர் பதவியில் நியமிக்கப்படுவோர், பதவி ஏற்கும் நாளில் இருந்து, மூன்று ஆண்டுகள் அல்லது 65 வயதில், அவரது பதவி முடியும் வகையில் சட்டம் இருந்தது. இந்நிலையில், உயர்கல்வித் துறையின் சார்பில் இயங்கும், பாரதியார், பாரதிதாசன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை, தமிழ்நாடு கல்வியியல் கல்லூரி பல்கலை உள்ளிட்ட ஒன்பது பல்கலை துணைவேந்தர்களின் ஓய்வுபெறும் வயதை, 65ல் இருந்து, 70 ஆக உயர்த்தி, கவர்னர் ரோசையா, கடந்த மாதம், அவசரச் சட்டம் பிறப்பித்தார். தற்போது, சுகாதாரத் துறை சார்பில் இயங்கும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் செயல்படும், உடற்கல்வி, விளையாட்டு பல்கலை ஆகியவற்றின் துணைவேந்தர்களின் ஓய்வுபெறும் வயதையும், 65ல் இருந்து 70 ஆக உயர்த்தி, கவர்னர் ரோசையா நேற்று உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசிதழில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment